திருகோணமலை – புல்மோட்டையில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின்போது மாணவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் திருமலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புல்மோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவருக்கும் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கிடையே இன்று (15) காலை பாடசாலையில் வைத்து கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உயர்தர மாணவர் சாதாரணதரத்தில் கல்வி கற்கும் மாணவர் மீது கூரிய ஆயுதத்தைக் கொண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த மாணவரின் கழுத்துப் பகுதியில் பாரிய வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் அவர் புல்மோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.