குமுதினி படுகொலையின் 40ஆண்டு நினைவுதினம் இன்று நெடுந்தீவு இறங்குதுறைமுகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. குமுதினி நினைவேந்தல் குழுமத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9 மணியளவில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன், நெடுந்தீவு இறங்குதுறையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்கள் மத தலைவர்கள் மற்றும் நெடுந்தீவு மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
கடந்த 1985 ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி காலை 7.30மணியளவில் நயினாதீவிற்கு அண்மித்த பகுதியில் குமுதினிப் படகில் சென்ற பயணிகள் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், பலர் காயமடைந்திருந்தனர். இச்சம்பவத்தில் 7 மாத குழந்தை உட்பட 36 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.