பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.
'தக் லைப்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் வெளியிடப்பட்டது. பாடல் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.
அதில், கமல் மற்றும் சிம்பு நடனமாடும் காட்சிகள் ஹைலைட். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
க்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
'THUG LIFE' படத்தின் இசை வெளியீட்டு விழா மே 24ம் தேதி சென்னையில் நடைபெறும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் 17ம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கமல்ஹாசன் கூறியதாவது
"சென்ற தலைமுறையைப் போலவே இந்த தலைமுறை நடிகர்களும் வளர்ந்து வருகின்றனர். தக் லைஃப் திரைப்படத்தில் என்னுடன் சிம்பு நடித்துள்ளார். அவர் செட்டுக்கு வரும் போது நீ ஒரு லெஜெண்டிடம் இணைந்து நடிக்க போகிறாய் என அனைவரும் கூறுவர். நான் அவர் அருகில் சென்று நான் யார் என்று பயப்படாதே என்றேன் அதற்கு சிம்புவும் நானும் புதுப் பையன் என நீங்களும் நினைத்து விடாதீர்கள்.உங்கள் வேலையை ஒழுங்காக பாருங்கள் என கூறினார்" என்றார்.