காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியுள்ள சூரி நடித்துள்ள 'மாமன்' படம் நாளை வெளியாகிறது. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இப்படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்துள்ளனர்.
ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது.
இந்நிலையில் படத்தின் கதாப்பாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் ராஜ்கிரண் - சிங்கராயர், ஜெய பிரகாஷ் - ரேகா அப்பா, விஜி சந்திரசேகர் - பவுன் அம்மாள், பிரகீத் சிவன் - நிலன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.