TamilsGuide

யோகி பாபு நடித்த ஜோரா கைய தட்டுங்க படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ரிலீஸ்

தமிழ் சினிமாவில் யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார். நகைச்சுவை கதாபாத்திரத்துடன், கதையின் நாயகனாக நடித்த மண்டேலா, பொம்மை நாயகி, கோலமாவு கோகிலா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் தற்போது ஜோரா கைய தட்டுங்க என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விநீஷ் மில்லினியம் இயக்கியுள்ளார். வாமா எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி இப்படத்தை தயாரித்துள்ளார். எஸ்.என். அருணகிரி இசையமைகத்துள்ளார்

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த மாதம் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு படக்குழுவிற்கு தனது வாழ்த்தை தெரிவித்திருந்தார். திரைப்படம் நாளை வெளியாகிறது.

இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.
 

Leave a comment

Comment