யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
15 வயதான குறித்த சிறுமி, 5 மாத கர்ப்பமான நிலையில் , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் , சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான 32 வயதுடைய நபரைக் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் சிறுமியை நீண்ட காலமாக துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.