அண்மையில் பேருந்து விபத்து இடம்பெற்ற நுவரெலியா கொத்மலை, கெரண்டியெல்ல பகுதிக்கு அருகில் மற்றுமொரு விபத்துச் சம்பவமொன்று இன்று(14) இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா – கொழும்பு பிரதான வீதியினூடாகப் பயணித்த வான் ஒன்றே கொத்மலை- கெரண்டியெல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தின் போது குறித்த வேனில் 7 சிறுவர்கள் உட்பட 18 பேர் பயணித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 11 ஆம் திகதி கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.