TamilsGuide

பாகிஸ்தானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவு

பாகிஸ்தானில் இன்று பிற்பகஙல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது.

இன்று பிற்பகலில் 1.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட அதிர்வால், ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.

உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும். இது பல பெரிய பிளவுகளால் கடக்கப்படுவதன் விளைவாக, பாகிஸ்தானில் நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன மற்றும் அழிவுகரமானவை. 
 

Leave a comment

Comment