TamilsGuide

இனி கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன்- சூரியின் அதிரடி முடிவு

காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியுள்ள சூரி நடித்துள்ள 'மாமன்' படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகிறது.டம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகிறது.அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் நடந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்றில் இனி ஹீரோவாக மட்டுமே நடிக்கப்போவதாக சூரி தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ''எனக்கு யாருடனும் போட்டி கிடையாது. ஒரு கட்டத்தை (நகைச்சுவை) தாண்டி வந்துவிட்டேன். இனி மீண்டும் அந்த பாதைக்கு செல்வது கடினம். அப்படி நடித்தாலும்கூட, அந்த கதாபாத்திரம் வலிமையானதாகவும், என்னை மக்கள் மத்தியில் இன்னும் ஆழமாக கொண்டு செல்லும் கதாபாத்திரமாக இருக்க வேண்டும்.

இனி பத்தோடு பதினொன்றாக என்னால் இருக்க முடியாது. 'என்னை தேடி வந்து அழைக்கிறார்களே, கண்டிப்பாக இவர்களுக்கு ஒரு படம் நடித்து கொடுத்துவிட வேண்டும்' என்ற எண்ணத்தில் இனி என்னால் நடிக்க முடியாது. அப்படி சென்றால், என்னை கதைநாயகனாக வைத்து படம் எடுக்க வரும் இயக்குனர்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்? கதையின் நாயகனாக நடிப்பதில் மட்டுமே திட்டவட்டமாக இருக்கிறேன்.

அரசியலுக்கு வருவேனா? என்று கேட்கிறார்கள். அது எனக்கு தெரியாது. 'மண்டாடி' படத்துக்காக மீண்டும் உடலை வருத்தி நடிக்க போகிறேன். கடுமையான 'டயட்' இருக்க போகிறேன்'' என்றார்
 

Leave a comment

Comment