விஜய் டிவியை வாங்கிய நிறுவனம் பிரியங்காவை வேலை நீக்கம் செய்ய முடிவு
சினிமா
விஜய் டிவியை வாங்கிய புதிய நிறுவனம் பிரியங்கா போன்ற பிரபலமான தொகுப்பாளர்களை வேலை நீக்கம் செய்யவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் தான் பிரியங்கா.
இவர், தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பிரபலமாக இருக்கும் பிரியங்கா சந்தானம், யோகி பாபு, சிவகார்த்திகேயன் இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி பல பிரபலங்கள் தற்போது வெள்ளத்திரையில் பிரபலமாக இருக்கிறார்கள். இதனால் பிரியங்காவும் வெள்ளத்திரைக்கு செல்வார் என்ற பேச்சு அடிப்பட்டு வந்தது.
இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வசிஸ்ட் என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார். ஆனால் பிரியங்கா இதற்கு முன்னர் திலிப் குமார் என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுவிட்டார் என்பதும் கூறப்பட வேண்டியது.
இந்த நிலையில், நேற்றைய தினம் விஜய் தொலைக்காட்சியை நஷ்டத்தில் செல்வதால் அதிக விலைக்கு கலர்ஸ் தொலைக்காட்சி வாங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியை வாங்கிய நிறுவனம் பிரியங்காவை வேலை நீக்கம் செய்ய முடிவு- இது முன்பே தெரியுமா? | Vj Priyanka S Job At Risk After Vijay Tv Transfer
அதே போன்று அவர்கள் இதுவரையில் காலமும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் இடைநிறுத்தம் செய்யவுள்ளதாகவும், அதன் மூலம் பிரபலமான கோபிநாத், பிரியங்கா, மாகாபா உள்ளிட்ட பல பிரபலங்கள் வேலை நீக்கம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறிய நிலையில், “பிரியங்கா இந்த விடயத்தை முன்பே தெரிந்து கொண்டு தான் லண்டனில் செட்டிலாகிய இலங்கை தமிழர் வசியை திடீர் திருமணம் செய்து கொண்டாரா..?” என கேள்வி எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.





















