TamilsGuide

உள்ளூராட்சி தேர்தல் - 18 வேட்பாளர்கள் கைது

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் கடந்த மார்ச் 03 ஆம் திகதி முதல் நேற்று வரை 18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காலகட்டத்தில் 62 கட்சி ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 14 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், தேர்தல் தொடர்பான 38 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறியதாக 138 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
 

Leave a comment

Comment