• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பகுத்தறிவாளர் டாக்டர் கோவூர்..

சினிமா

பகுத்தறிவாளர் டாக்டர் கோவூர் பிறந்த நாள் 10.04.1898
1 லட்சம் பரிசு !
கீழ்கண்ட 20 சவால்களில் ஏதாவது ஒன்றை செய்து விட்டு 1 லட்சம் ரூபாய் பரிசை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்து 1 லட்சம் ரூபாயோடு காத்திருந்தார் டாகடர் கோவூர்.ஆனால் யாரும் அவரின் சவாலை ஏற்கவில்லை அவரின் சவால்களை செய்யவும் முடியவில்லை.மூட நம்பிக்கை,பேய்.பிசாசு,பில்லி சூன்யம் போன்ற மூடநம்பிக்கைகளை அறியலிலின் துணைகொண்டு தகர்த்தவர் கோவூர்.
டாக்டர்.கோவூரின் சவால்கள்:
1. முத்திரையிடப்பட்டுள்ள உறையின் உள்ளே ஒரு கரன்சி நோட்டின் வரிசை எண்ணைப் படித்துக் காட்டுக.
2. ஒரு கரன்சி நோட்டினைப் போன்று மற்றொரு கரன்சி நோட்டினை உண்டாக்கிக் காட்டுக.
3. கடவுள் துணையால் பாதத்தில் எவ்விதப் புண்ணோ, கொப்பளமோ ஏற்படாமல் அரை நிமிட நேரம் எரியும் தணலில் அசையாமல் நின்று காட்டுக.
4. நான் கேட்கும் ஒரு பொருளை ஒன்றுமில்லாமல் (சூனியத்தில்-வெற்றிடத்தில்) இருந்து உண்டாக்கிக் காட்டுக.
5. மனோபலத்தைப் பயன்படுத்தி ஒரு திடப் பொருளை அசைத்தோ, வளைத்தோ காட்டுக.
6. தொலைவில் உணர்தல் ஆற்றலைப் பயன்படுத்தி மற்றொருவன் நினைப்பதை வெளியில் எடுத்துக்கூறுக.
7. பிரார்த்தனை, அத்மபலம், புனித தீர்த்தம், விபூதி, ஆசீர் வாதம் இவை போன்றவற்றின் மூலம் துண்டிக்கப்பட்ட ஒர் உடல் உறுப்பை ஓர் அங்குல நீளம் வளரச் செய்து காட்டுக.
8. யோக சக்தியால் ஆகாயத்தில் எழுப்பிக் காட்டுதல் அல்லது மிதப்பது போல் செய்து காட்டுக.
9. யோக சக்தியால் அய்ந்தே மணிதுளி அய்ந்து நிமிடம் இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டுக.
10. நீரில் நடந்து காட்டுக.
11. உன் உடலை ஓர் இடத்தில் இருக்க வைத்துவிட்டு வேறு ஓர் இடத்தில் இவ்வுடலை உருவாக்கிக் காட்டுக
.
12. யோக சக்தியால் அரை மணி நேரம் சுவாசிப்பதை நிறுத்திக் காட்டுக.
13. ஆழ்நிலை தியானத்தாலோ, வேறு எவ்வகை தியானத்தாலே படைப்பாற்றல் மிக்க நுண்ணறிவையோ, பேரறிவையோ பெருக்கிக் காட்டுக.

14. நிழற்படம் பிடிப்பதற்காக ஓர் ஆவி அல்லது ஒர் பேயினை நேரில் தோன்றச் செய்க.
15. நிழற்படம் பிடிக்கும்போது படத்தாளில் பதிவாகாதவாறு உன்னை மறைத்துக் காட்டுக.
16. மறுபிறவியின் விளைவாலோ, நல்ல அல்லது கெட்ட ஆவிபிடித்து இருப்பதாலோ உனக்குத் தெரியாத மொழியினைப் பேசிக்காட்டுக.
17.பூட்டப்பட்ட அறையிலிருந்து தெய்வீக ஆற்றலால் வெளியே வந்த காட்டுக.
18. மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளை கண்டுபித்துக் காட்டுக.
19. வெறும் நீரை பெட்ரோலாகவோ, ஒயினாகவோ மாற்றிக் காட்டுக.
20. ஒயினை ரத்தமாக மாற்றிக் காட்டுக.
- Parimala Rajan
 

 

Leave a Reply