TamilsGuide

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை வீடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வாக்குச் சீட்டு விநியோகம் ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும்
ஏப்ரல் 20 ஆம் திகதி சிறப்பு விநியோக நாளாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ள உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலை நடத்துவதை இன்று வரை தொடர்ந்து நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

மேலும் மனுக்களை பரிசீலித்த பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லாஃபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment