தனியார் துறை ஊழியர்களின் மாதாந்திர குறைந்தபட்ச ஊதியத்தை 27,000 ரூபாயாக உயர்த்துவதற்கான சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸவின் கூற்றுப்படி, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் அமைச்சரவைக்கு அனுப்பப்பட்ட பின்னர் எதிர்வரும் மே மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
தற்போது, தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியம் 21,000 ரூபாயாக உள்ளது.
இந்த ஊதிய உயர்வு இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப உள்ளதாகவும் அமைச்சக செயலாளர் குறிப்பிட்டார்.
இந்த அதிகரிப்பைத் தொடர்ந்து, தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியம் அடுத்த ஆண்டு 35,000 ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் அமைச்சகத்தின் செயலாளர் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த தகவலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.