கனடாவின் வான்கூவர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கால்கரிக்கு புறப்பட இருந்த வெஸ்ட்ஜெட் விமானம் திடீரென இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
மனிதப் பிழைகள் அல்லது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, விமானி, விமானத்தை பறத்தல் முறையில் இருந்து பின்வாங்க முடிவு செய்துள்ளார்.
அவசர நிலையையை கருத்தில் கொண்டு, மீட்புக்குழுக்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
விமானம் புறப்படவிருந்த நிலையில் இறுதி நேரத்தில் விமானப் பயணம் ரத்து செய்யப்பட்ட போதிலும், எந்த பயணிகளுக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பயணிகள் அனைவரும் விமான நிலையத்திற்கு பஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.