TamilsGuide

தூங்குவதற்கு முன் செல்போன் பார்ப்பவர்களா நீங்களா? அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

தூங்குவதற்கு முன்பு செல்போனில் வீடியோ பார்த்தால் மூளை பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்க புற்றுநோய் ஆராயச்சியாளர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் ஆராய்ச்சியாளர்கள், செல்போன்களை பயன்படுத்துவது தொடர்பாக சமீபத்திய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தூங்குவதற்கு முன் செல்போன் பார்ப்பவர்களா நீங்களா? அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை | Do You Check Your Cell Phone Going To Sleep

இந்த ஆய்வானது செல்போன்களை அதிகமாக பயன்படுத்தும் 1,22,000 பேரிடம் நடத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இவர்களில் 41 சதவீதம் பேர் தினமும் தூங்குவதற்கு முன் தொலைபேசியைப் பயன்படுத்தும் நபர்களாகவும்இ 17.4 சதவீதம் பேர் அந்த நேரத்தில் தங்கள் தொலைபேசியைப் பயன்படுத்துவதில்லை என்றும் கூறியுள்ளனர்.

அந்த நேரத்தில், தொலைபேசிகளைப் பயன்படுத்தாதவர்களை விட, பயன்படுத்தியவர்களுக்கு தூக்கப் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது.

தொலைபேசி அல்லது பிற டிஜிட்டல் திரையிலிருந்து வெளியாகும் வெளிச்சம், மெலடோனின் வெளியீட்டை தாமதப்படுத்துகிறது. இதன் விளைவாக இயற்கையான தூக்கம் பாதிக்கப்படுகிறது.

தூங்குவதற்கு முன் செல்போன் பார்ப்பவர்களா நீங்களா? அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை | Do You Check Your Cell Phone Going To Sleep

படுக்கைக்குச் செல்வதற்கு முன் 30 நிமிடங்கள் சமூக ஊடகங்களில் செலவிடுவதால், தூக்கக் கோளாறுகள் மற்றும் அமைதியற்ற தூக்கம் ஏற்படும்.

தூக்கமின்மை ஒரு நபரின் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலை தொடர்ந்தால் உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சோர்வுஎன்பன ஏற்படும் மேலும் இந்த பழக்கமானது மனித உடலின் உயிரியல் கடிகாரத்தையே சீர்குலைத்துவிடும்' என்று ஆய்வறிக்கை கூறுகியது
 

Leave a comment

Comment