நடிகர் சூர்யா நடிக்கும் 44வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடலான 'கண்ணாடி பூவே' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து ரெட்ரோ படத்தின் இரண்டாவது பாடலான கனிமா பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு பாடல் மிக வைரலாக அமைந்தது.
படத்தின் பின்னணி காட்சிகளை காமிக் வடிவங்களில் படக்குழு வாரந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் 8- வது அதியாயத்தை வெளியிட்டது அதில் நடிகர்களான ஜெயராம் மற்றும் ஜோஜு ஜார்க் படத்தின் எப்படி திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார் என்பதை விவரித்துள்ளது.
ஜெயராம் எப்பொழுதும் நடிக்கும் போது அங்கு இருப்பவர்களை கலகலப்பாக வைத்திருப்பார். பல நடிகர்களின் குரலில் பேசி மற்றவர்களை சிரிக்க வைப்பார் என தெரிவித்துள்ளனர். மேலும் ஜோஜு ஜார்ஜ் மலையாளம் பேசினாலும் படப்பிடிப்பின் காட்சியின் போது பக்கா தமிழில் பேசி அசத்துவார் என அந்த காமிக்கில் பதிவிட்டுள்ளனர்.