TamilsGuide

நடிகர் ஆர்கேவுக்கு மிக உயரிய டான் ஸ்ரீ விருது வழங்கி ATJEH DARISSALUM மன்னர் கௌரவம்

தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆர்கேவுக்கு, வெற்றிகரமான தொழிலதிபர் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது.

அந்தவகையில் கடந்த 15 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் விஐபி நிறுவனத்தின் மூலமாக பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அதில் வெற்றியும் கண்டவர் ஆர்கே..

குறட்டைக்கு மட்டுமல்ல கொரோனாவுக்கும் கூட இவரது நிறுவனம் தீர்வு கண்டுபிடித்தது. அதிலும் ஹைலைட்டாக 'டை' அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்குத் தீர்வு காணும் விதமாக, அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை உலகிலேயே முதன்முறையாக பொது மார்க்கெட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தினார் ஆர்கே.

ஒரு தமிழனாக, இந்தியனாக இவர் கண்டுபிடித்த இந்த இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூக்கு இந்திய அரசாங்கம் 20 வருட அறிவுசார் காப்புரிமை வழங்கி அங்கீகரித்துள்ளது.

அதுமட்டுமல்ல மனிதனின் தலையாய பிரச்சனைகளில் ஒன்றான குறட்டைக்கு தீர்வு கண்டுள்ளார் ஆர்கே. அது இந்திய அரசாங்கத்தால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அப்படி, தான் எடுத்துக்கொண்ட எந்த ஒரு விஷயத்திலும் மிகப்பெரிய போராட்டம் நடத்தி அதை சாதித்துக் காட்டுபவராக ஆர்கே இருக்கிறார்.

சினிமாவில் என்றால் சில மாதங்களுக்கு சில நூறு பேருக்கு தான் வேலை வாய்ப்பளிக்க முடியும்.. ஆனால் கடந்த 15 வருடங்களாக தனது நிறுவனம் மூலம் இந்தியாவெங்கிலும் சுமார் 2000 குடும்பங்களுக்கு மேல் வேலை வாய்ப்பளித்து வருகிறார் ஆர்கே.

இப்படிப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்கராரரான ஆர்கேவுக்கு இவரது பன்முகத்திறமையை பாராட்டி உலக அளவில் பல்வேறு விருதுகளும் கௌரவங்களும் தேடி வந்து தங்களை சொந்தமாக்கிக் கொண்டிருக்கின்றன.

இங்கே இந்திய அரசும் தமிழக அரசும் எவ்வளவோ விருதுகளைக் கொடுத்தாலும் சினிமாவைப் பொறுத்தவரை ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருதுகளை, ஆஸ்கார், ரோட்டர்டாம் விருதுகளைத் தான் பெரிதாக நினைக்கிறோம்.

காரணம் வெளிநாட்டுக்காரர்கள் நம் திறமையை அங்கீகரிப்பது என்பது எப்போதுமே நமக்கு பெரிய விஷயம் தான். அப்படி ஒரு பன்முகத் திறமையாளராக, ஒரு தொழில் வல்லுநராக, ஒரு சாதனையாளராக அடையாளம் கண்டு நடிகர் ஆர்.கேவுக்கு 18 நாடுகள் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளன.

நான்கு வருடங்களுக்கு முன்பு மலேசிய அரசின் உயரிய விருதான டத்தோ ஸ்ரீ விருது ஆர்.கேவுக்கு வழங்கப்பட்டது. அது மட்டுமல்ல ATJEH DARISSALUM மன்னர் கைகளாலும் டத்தோ ஸ்ரீ விருது பெற்றவர் தான் ஆர்கே.

இந்த நிலையில் தற்போது ATJEH DARISSALUM மன்னருக்கு அடுத்ததாக கருதப்படும் டான் ஸ்ரீ என்கிற உயரிய விருதையும் ATJEH DARISSALUM மன்னர் கையால் பெற்றுள்ளார் ஆர்.கே.

இது கிட்டத்தட்ட பிரிட்டிஷ் அரசு வழங்கும் 'சர்' பட்டத்திற்கு நிகரானது. இந்த விருது வழங்கும் விழா சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்றது.

ஆர்கேவை மேலும் சிறப்பிக்கும் விதமாக கிட்டத்தட்ட 400 வருடம் பழமை வாய்ந்த, தனக்கு இன்னொரு மன்னரிடம் இருந்து பரிசாகக் கிடைத்த இரண்டு வாள்களையும் அந்த நாட்டின் நினைவுச் சின்னமாக ஆர்கேவுக்கு தன் கையால் பரிசளித்துள்ளார் ATJEH DARISSALUM மன்னர்.

அவற்றை இந்தியாவுக்கு கொண்டுவந்து பெருமை சேர்த்துள்ளார் ஆர்கே..

இதுவரை இந்தியாவில் இப்படி ஒரு கௌரவம் பெற்ற முதல் நபர் என்றால் அது நம் நடிகர் ஆர்கே மட்டும் தான் .

ATJEH DARISSALUM மன்னரிடம் இருந்து இப்படிப்பட்ட உயரிய விருது மற்றும் கௌரவம் கிடைத்தது குறித்து நடிகர் ஆர்.கே கூறும்போது,

"வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது என்பது வேறு.. அது மட்டுமே முக்கியமல்ல.. நமது கண்டுபிடிப்புகள் மக்களுக்குப் பயன் தரவேண்டும். நம் சாதனைகளுக்காக வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் கையால் இப்படி விருதுகளையும் கௌரவங்களையும் பெறுவதை ஒரு தமிழனுக்கான உயர்ந்த அங்கீகாரமாக நான் நினைக்கிறேன்.

காரைக்குடியிலிருந்து வந்த ஒருவர் மன்னர் கையால், பழம்பெருமை வாய்ந்த இரண்டு வாள்களை எனக்கு பரிசாகத் தரும் அளவிற்கு ஏதோ சாதித்துள்ளேன் என்பது ஒரு தமிழனாக என்னை பெருமை கொள்ள வைக்கிறது.

இதுபோன்ற விருதுகளும் அங்கீகாரமும் இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்வதற்கு உந்துசக்தியாக அமைந்துள்ளது" என்று மகிழ்ச்சி பொங்க கூறினார் ஆர்கே.

கருமாரி மூவிஸ் சார்பாக ஆர். கண்ணன் இயக்கத்தில், KT பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவில், இமான் இசையில் ஆர் கே நடிக்கும் படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. விலங்குகள் முக்கிய பங்கேற்கும் இப்படம் குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கும் விதமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment