TamilsGuide

எனக்கு பிறந்த குழந்தையா என்று தெரியாமலேயே ரூ.21 கோடி தந்தேன் - சந்தேகத்தில் தவிக்கும் எலான் மஸ்க்

உலக பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க் தற்போது அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DODGE) துறையின் தலைவராக உள்ளார். அதிபர் டிரம்ப் உடன் மிகவும் நெருக்கம் காட்டி வரும் எலான் மஸ்க் அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வது வழக்கம்.

எலான் மஸ்க்குக்கு வெவ்வேறு பெண்கள் மூலம் இதுவரை 14 குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு மகள் திருநங்கையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். எனவே தனது மகள் இறந்துவிட்டதாக எலான் மஸ்க் கூறி வருகிறார். தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதை எலான் மஸ்க் தவிர்த்து வருகிறார்.

இதற்கிடையே ஆஸ்லே செயின்ட் கிளார் என்ற எழுத்தாளர் எலான் மஸ்க்கின் குழந்தையை தான் பெற்றெடுத்ததாக சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் ஆஷ்லேயின் ஆண் குழந்தை என்னுடையதா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் அவளுக்கு ₹21 கோடி கொடுத்தேன் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான பதிவில், "தெரியாமலேயே... நான் ஆஷ்லேக்கு $2.5 மில்லியன் (கிட்டத்தட்ட ரூ.21.4 கோடி) கொடுத்துள்ளேன், மேலும் அவளுக்கு வருடத்திற்கு $500k (ரூ.4.3 கோடி) அனுப்புகிறேன்" என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.

அரசு துறைகளில் எலான் மஸ்க்கின் ஆதிக்கத்தை கண்டித்து அவரின் டெஸ்லா நிறுவன கார்களை அமெரிக்கர்கள் புறக்கணிக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.

இதற்கிடையே ஆஷ்லே தனது டெஸ்லா காரை விற்பதாகக் அறிவித்திருக்கிறார். இதனால் மனம் நொந்துபோன எலான் மஸ்க் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்று தெரிகிறது.
 

Leave a comment

Comment