TamilsGuide

கொரோனாவை போன்று பரவும் புதிய வைரஸ் - ரஷியா விளக்கம்

கொரோனா தொற்றுக்கு பிறகு மக்களிடையே புதுவிதமான தொற்றுநோய்கள் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரஷியா முழுவதும் பரவி வரும் மர்ம வைரஸால் ரஷிய மருத்துவ நிபுணர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதன் அறிகுறிகள் அதிக காய்ச்சல் மற்றும் ரத்தம் கலந்த இருமல் ஆகும். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 10 நாட்களுக்கு மேல் படுக்கையில் முடங்கி விடுகின்றனர்.

இதனால் மர்ம வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்திய நிலையில், இதனை மறுத்துள்ள ரஷிய அதிகாரிகள் புதிய நோய்க்கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் மைக்கோபிளாஸ்மா நிமோனியா உள்ளிட்ட பொதுவான சுவாச நோய்த்தொற்றுகள் தான் என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மருத்துவர்கள் இந்த மர்ம வைரஸ் தொடர்பாக, இது சுவாசக்குழாய் தொற்று என்றும் அறிகுறிகள் மோசமடைந்தால் அவசர சிகிச்சை பெறுமாறும் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் சமூக வலைத்தளங்களில் மர்ம வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் ஒரே மாதிரியான அறிகுறிகளை கூறி தங்களது அனுபங்களை பகிர்ந்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment