TamilsGuide

தெற்கு நெடுஞ்சாலையில் கோர விபத்து

தெற்கு நெடுஞ்சாலையில் 26.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கம்பத்திற்கு அருகில் கொழும்பு நோக்கிச் சென்ற 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்துக்குள்ளான வாகனங்களில் இரண்டு லொறிகள், சொகுசு வேன் மற்றும் கார் ஒன்றும் அடங்கும்.

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற லொறியொன்றும், வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற சொகுசு வேனும் லொறியின் வலது பின்பக்கமும் மோதி விபத்துக்குள்ளானது.

அதேநேரம், பின்னால் வந்த காரும் வேன் மீது மோதியதுடன், விபத்தில் பாதுகாப்பு வேலியும் சேதமடைந்தது.
 

Leave a comment

Comment