TamilsGuide

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தின் விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது

அதன்படி, வரும் 8 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

கடந்த மாதம் 27 ஆம் திகதி 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதான அவர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டிருந்ததுடன் இதன்போது இரண்டு குற்றச்சாட்டுக்களுக்காக அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

எனினும், மற்றுமொரு குற்றச்சாட்டுக்காக அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment