டொரோண்டோ பெரும்பாக பகுதியில் (GTA) எரிபொருள் விலை இன்று முதல் கணிசமாக குறைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் கார்பன் வரி (carbon tax) இனி அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய பிரதமர் மார்க் கார்னி, கூட்டாட்சி அரசு ஏப்ரலில் இருந்து கார்பன் வரியை நீக்குவதாக அறிவித்தார்.
இதனால் நாடு முழுவதும் எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொரோண்டோ பெரும்பாக பகுதியில் எரிபொருள் விலை 20 சதங்களினால் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் எரிபொருள் 1.57 சதங்களிலிருந்து 1.37 சதங்களாக குறைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்பன் வரி நீக்கமானது எரிபொருள் விலைகளில் சாதக மாற்றத்தை உருவாக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.