நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சர்தார்.' இந்தப் படத்தின் வெளியீட்டின் போதே இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்தார் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வேக வேகமாக உருவானது.
சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கதைக்களம் ஜப்பானில் நடப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. எஸ்.ஜே சூர்யா பிளாக் டாகர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியாவிற்கு அச்சம்மிக்க ஒரு போர் நடைப்பெற இருக்கிறது அதை தடுக்கும் முயற்சியில் சர்தார் ஈடுப்படுவது போல காட்சிகள் அமைந்துள்ளது. படத்தின் டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இன்று நடைப்பெற்ற முன்னோட்ட வீடியோ வெளியீட்டு விழாவில் படக்குழு கலந்துக் கொண்டனர். அதில் கார்த்தி " இரும்பு திரை படத்தை பார்க்கும் போது செல்ஃபோனில் மெசெஜ் வருவதே பயமாக இருந்தது. சர்தார் திரைப்படத்திற்கு பிறகு வாட்டர் பாடிலை பார்பதேற்கே பயமாக இருந்தது. சர்தார் 2 திரைப்படத்தில் அப்படி ஒரு பயப்படும் விஷயத்தை தான் வைத்து இருக்கிறார். எஸ்.ஜே சூர்யா சாருக்கு எவ்வளவு நடிப்பு தீனி கொடுத்தாலும் பத்தாது. அவரு நடிக்க வந்தால் யாரும் செட்டில் செல்ப்ஹோன் பயன்படுத்த மாட்டார்கள். அவரது நடிப்பையே ரசித்து பார்த்துக் கொண்டு இருப்பர். டீசர் மற்றூம் திரைப்படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்" என கூறினார்.