TamilsGuide

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெயர் பரிந்துரை

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான பங்களிப்புகளுக்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

நார்வே நாட்டின் அரசியல் கட்சியான பார்ட்டியேட் சென்ட்ரம் உடன் இணைந்த ஒரு வழக்கறிஞர் குழுவான பாகிஸ்தான் வேர்ல்ட் அலையன்ஸ் அமைப்பினர் இம்ரான் கானின் பெயரை பரிந்துரைத்துள்ளனர்.

இதுதொடர்பாக பார்ட்டியேட் சென்ட்ரம் கட்சி தனது அதிகாரபூர்வ எக்ஸ் பதவில், பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மேம்படுத்துவதில் இம்ரான் கான் ஆற்றிய பணிக்காக அவர் அங்கீகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில், தெற்காசியாவில் அமைதியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக இம்ரான் கான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு முதன்முதலில் பரிந்துரைக்கப்பட்டார். தற்போது இரண்டாவது முறையாக அந்த பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும், நார்வே நோபல் குழு நூற்றுக்கணக்கான பரிந்துரைகளைப் பெறுகிறது, அதன் பிறகு அவர்கள் எட்டு மாத கால செயல்முறைக்கு பிறகு வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்

முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் 1996 இல் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியை தொடங்கினார். கடந்த 2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தார்.

அவரது பதவிக்காலத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்குகளில் கடந்த 2023 முதல் சிறையில் உள்ளார். கடந்த ஜனவரியில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. 
 

Leave a comment

Comment