TamilsGuide

ஈகுவடாரில் இடைக்கால துணை அதிபராக சின்தியா நியமனம்

தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் அதிபர் டேனியல் நோபோவா தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இவரது பதவிக்காலம் விரைவில் முடிகிறது. எனவே நாடாளுமன்ற தேர்தலுக்கான 2-வது கட்ட வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ளது. இதில் ஆளுங்கட்சி சார்பில் அதிபர் டேனியல் நோபோவாவும், அவரை எதிர்த்து இடதுசாரி வேட்பாளர் லூயிசா கோன்சலசும் போட்டியிடுகின்றனர்.

அந்த நாட்டு சட்டத்தின்படி தேர்தல் பிரசாரத்தின்போது அதிபரின் அதிகாரங்கள் துணை அதிபரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால் அதிபருடன் நிலவிய கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு துணை அதிபர் வெரோனிகா அபாத் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த பதவி காலியாக இருந்ததால் அதிபரின் அதிகாரங்கள் மாற்றப்படாமல் இருந்தன. இந்தநிலையில் ஆளுங்கட்சியின் பொதுச்செயலாளரான சின்தியா கெல்லிபர்ட்டை இடைக்கால அதிபராக நியமித்து அதிபர் டேனியல் உத்தரவிட்டுள்ளார். தற்போது அங்கு தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருவதால் அதிபரின் அதிகாரங்கள் விரைவில் சின்தியாவிடம் மாற்றப்பட உள்ளன.
 

Leave a comment

Comment