இத்தாலியின் ரோம் நகரில் உள்ள டெஸ்லா டீலர்ஷிப் விற்பனையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 கார்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. தீவிபத்து ஏற்பட்டபோது விற்பனையகத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மேலும், தீ முழுவதும் அணைக்கப்பட்டு, தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிபத்து குறித்து டீலர்ஷிப் உரிமையாளர் மற்றும் விற்பனையகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, டெஸ்லா கார் விற்பனையகத்தில் ஏற்பட்ட தீவிபத்து பயங்கரவாத தாக்குதல் என உலக பெரும்பணக்காரரான எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபகாலமாக இத்தாலி முழுவதும் டெஸ்லா வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒருவாரத்திற்கு முன்பு வடக்கு ரோமில் உள்ள மற்றொரு கார் டீலர்ஷிப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் டெஸ்லா கார்கள் உள்பட 30 கார்கள் எரிந்து சேதமாயின என்பது குறிப்பிடத்தக்கது.