நடிகர் அமிதாப் பச்சன் ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் படங்கள் நடித்து இருக்கிறார். ரஜினியின் வேட்டையன் படத்தில் அவர் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.
82 வயதாகும் அமிதாப் பச்சன் தற்போதும் படங்கள், விளம்பரங்கள், டிவி நிகழ்ச்சிகள் என படுபிஸியாக நடித்து வருகிறார்.
அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.
அமிதாப் பச்சன் தனது திருமணத்தின்போது ஜெயாவுக்கு போட்ட ஒரு கண்டிஷன் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. தனது பேத்தி நவ்யா நந்தாவின் podcastல் இந்த விஷயத்தை கூறி இருக்கிறார்.
எனக்கு மனைவியாக வருபவர் 9 - 5 வேலைக்கு செல்பவராக இருக்க கூடாது என தான் அமிதாப் கண்டிஷன் போட்டாராம்.