• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சூதாட்ட செயலி விளம்பரம்- நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு

சினிமா

நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய புகாரில் சைபராபாத் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பணம் பெற்றுக்கொண்டு நடிகர்கள் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததாக தொழிலதிபர் பனிந்திர சர்மா புகார் அளித்திருந்தார்.

நடிகர்கள் மக்களை தவறாக வழி நடத்தியதால், அவர்கள் கடினமாக உழைத்த பணத்தை சூதாட்ட செயலியில் இழந்து விட்டனர் என்று புகார்தாரர் குறிப்பிட்டுள்ளார்.

2015ல் இதுபோன்ற விளம்பரத்தில் நடித்தேன். ஆனால் ஒரு வருடம் கழித்து விலகிவிட்டேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply