தென்னிலங்கயை உலுக்கிய துப்பாக்கி சூடு - மேலதிக தகவலை வெளியிட்ட பொலிஸார்
இலங்கை
காலி, ஹினிதும – பனங்கல பகுதியில் நேற்றிரவு (30) 11.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்திருந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் தற்சமயம் பொலிஸார் மேலதிக தகவலை வெளியிட்டுள்ளனர்.
டி-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்தப் துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்தவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், துப்பாக்கி சூடு நடந்த போது உயிரிழந்த மூவரும் மது அருந்தியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் 29 மற்றும் 54 வயதுடைய இருவர் அடங்குவதுடன், மூன்றாவது நபரின் வயது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சந்தேக நபர்களை அடையாளம் காண ஹினிதும பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.