• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழில் சொற்களிற்கா பஞ்சம்... ஏன்

சினிமா

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 25-வது படமாகவும், ஜி.வி. பிரகாஷ்க்கு  100-வது படமாகவும், 150 கோடி பட்ஜெட்டில், 1950-1960 காலப் பகுதியில் கதைக்களமாக இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி ஜூலை மாதத்தில் வெளிவரவுள்ள "பராசக்தி" படத்திற்கு கனடாவை தளமாக இயங்கி வரும் "செந்தியின் தமிழன் வழிகாட்டி " வாழ்த்துகளை வழங்குவதில் பெருமை கொள்கிறது.

இதே வேளை படத்திற்கு பராசக்தி-2 அல்லது மீண்டும் பராசக்தி என பெயரிடலாம்.  தமிழில் சொற்களிற்கு பஞ்சம் இல்லை, ஐந்து இலட்சம் வார்த்தைகள்  தமிழில் உண்டு.

எதிர் வரும் சந்ததியினர் கூகுளில் (Google) பராசக்தி என்று தேடினால் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பராசக்தி என்று தான் வரவேண்டும் என்பது எமது தாழ்மையான கருத்து.

"தமிழன் வழிகாட்டி "
செந்தி
(416) 615 4646

Leave a Reply