துயர் பகிர்வு - More
-
திரு தம்பித்துரை சுதர்சன் Sri Lanka -
திருமதி இராசரத்தினம் இலட்சுமிபிள்ளை Toronto -
திருமதி இரத்தினகுமாரி பிரான்சிஸ் Toronto -
திரு தம்பு தியாகராசா Germany -
திரு அம்பலவாணர் வரதராசா மீசாலை மேற்கு -
திரு விஜயகுமார் பிரசாத் Germany -
திருமதி நாகேஸ்வரி குணரட்ணம் Germany -
திருமதி கனகரட்ணம் சின்னம்மா Germany -
திருமதி தங்கேஸ்வரன் யோகாம்பிகை Sri Lanka -
திரு செல்லையா சிவசுப்பிரமணியம் United Kingdom
Click More Thuirpakirvu

யாரும் நெருங்க முடியாது: டீப்சீக்-க்கு குட்டு.. அலிபாபா களமிறக்கிய புது ஏ.ஐ. மாடல்
சீனாவை சேர்ந்த அலிபாபா தனது ஏ.ஐ. மாடல் Qwen2.5 Max-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏ.ஐ. மாடல் தற்போது அதிக பிரபலமாக இருக்கும் டீப்சீக் ஏ.ஐ., ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் GPT-4o மற்றும் மெட்டா நிறுவனத்தின் Llama ஆகியவற்றை விட சிறப்பாக செயல்பட்டது என அலிபாபா தெரிவித்துள்ளது.
இது குறித்து அலிபாபா கிளவுட் பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "Qwen 2.5-Max ஏ.ஐ. மாடல் GPT-4o, DeepSeek-V3 மற்றும் Llama-3.1-405B ஐ விட சிறப்பாக செயல்படுகிறது" என்று கூறியுள்ளது.
சர்வதேச ஏ.ஐ. தளத்தில் டீப்சீக் நிறுவனத்தின் ஏ.ஐ. மாடல் மிக குறுகிய காலக்கட்டத்தில் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்த நிலையில், அலிபாபா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், டீப்சீக் நிறுவனத்தின் R1 ஏ.ஐ. மாடல் சிலிகான் வேலியை ஆட்டம் காண செய்ததோடு, தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளை சரிய செய்தது.
டீப்சீக்-இன் ஏ.ஐ. மாடல் அதிவேகமாக பிரபலம் அடைந்து வரும் நிலையில், அதற்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் வகையில் அலிபாபாவின் Qwen 2.5 Max ஏ.ஐ. மாடல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.