பல முரண்களுள்ளும் ஈழவிடுதலைக்காய் உழைத்த மாவை சேனாதிராஜா அவர்கள் மறைவு!
சினிமா
மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) என ஈழ தேசியர்களால் அறியப்பட்ட தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், ஈழவிடுதலைக்காய் முன்னின்று உழைத்தவருமான சோமசுந்தரம் சேனாதிராஜா அவர்கள் இன்று மரணமடைந்தார்.
உடல் நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தன் 82 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
ஈழ தேசத்தில் அக்டோபர் 27, 1942 ல் பிறந்த அவர்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரென நாடறிந்த தமிழ் அரசியல்வாதி.
சேனாதிராசா அவர்கள் ஆரம்பகால இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றினார்.
அவரது போராட்டக் குணமறிந்து தமிழரசுக்கட்சி அவரை இளைஞர் அணியில் 1962 இல் இணைத்துக் கொண்டது.
1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.
1969 முதல் பலதடவைகள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் பல ஆண்டுகள் கொடூரமாக தன் காலத்தைக் கழித்தார்.
1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
1989 சூலை 13 சட்டத்தரணி அ. அமிர்தலிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராசா அவர்கள் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.
செப்டம்பர் , 2014இல் சேனாதிராசா அவர்கள் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவராக்கப் பட்டார்.
சிறந்த மேடைப் பேச்சாளர். அன்னாருக்கு எம் அஞ்சலி !