சாதனை மாணவர்களை பாராட்டினார் பிரதமர் ஹரினி அமரசூரிய
இலங்கை
புருனே தாருஸ்ஸலாமில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான ஆசிய பசிபிக் ITC கூட்டணி விருது விழாவில் எமது நாட்டின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் இரண்டாம் இடத்தையும் இரண்டு சிறப்பு விருதுகளையும் பெற்றனர்.
இந்தநிலையில், இச் சாதனையை நிகழ்த்திய மாணவர்களை பிரதமர் ஹரிணி அமரசூரிய, பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு அவர்களின் சிறந்த பங்களிப்பிற்காக அவர் தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையை தொழில்நுட்ப சிறப்பிற்கான மையமாக நிலைநிறுத்த இளம் திறமைகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் அமரசூரிய, நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் பங்கை அங்கீகரித்து, இளைஞர்களை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் தெரிவித்திருந்தார்.