• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது காதலியை கரம்பிடித்தார்

சினிமா

2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அஜய் ஞானமுத்து அறிமுகமானார். இதனையடுத்து அவர் இமைக்க நொடிகள், கோப்ரா, டிமான்டி காலனி 2 ஆகிய படங்களை இயக்கினார்

தற்போது அவர் டிமான்டி காலனி 3 படத்தின் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது காதலியை திருமணம் செய்துள்ளார். இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.

பல்வேறு திரை பிரபலங்கள் அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள், இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
 

Leave a Reply