பிரபல பாலிவுட் நடிகருக்கு கத்திக்குத்து - மருத்துவமனையில் அனுமதி
சினிமா
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திவிட்டு மர்ம நபர் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள வீட்டில் சைஃப் அலி கான் உறங்கிக் கொண்டிருந்தபோது, அதிகாலை 2 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து திருட முயற்சித்துள்ளார்.
அப்போது வீட்டில் இருந்தவர்கள் விழித்ததையடுத்து, சைஃப் அலிகானுக்கும் மர்ம நபருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
மர்ம நபர் சைஃப் அலி கானை 2, 3 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார். இதில் சைஃப் அலி கானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சைஃப் அலி கான் மும்பையில் உள்ள லீலாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின்போது சைஃப் அலி கான் மனைவி கரீனா கபூருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பந்த்ரா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.























