சித் ஸ்ரீராம் குரலில் டிராகன் திரைப்படத்தின் வழித்துணையே பாடல் நாளை வெளியீடு
ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக டிராகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ரைஸ் ஆஃப் தி டிராகன் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் அடுத்த பாடலான வழித்துணையே பாடலின் ப்ரோமோ வீடியோ படக்குழு வெளியிட்டது.
வழித்துணையே பாடல் நாளை மாலை 6 மணிக்கும் வெளியாகவுள்ளது. இப்பாடலின் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் . இப்பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் சஞ்சனா கல்மஞ்சே இணைந்து பாடியுள்ளனர்.






















