• Welcome to TamilsGuide
செய்திகள் 1

7வது மாடியில் பார்ட்டி.. காதலியுடன் சண்டை...கீழே விழுந்து உயிரிழந்த சட்டக்கல்லூரி மாணவர்

சினிமா

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நேற்று, அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து தவறி விழுந்து சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் உயிழந்தார்.

தபாஸ் என அடையாளம் காணப்பட்ட அந்த மாணவர், நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி படித்து வந்தார்.

காவல்துறையின் கூற்றுப்படி, அவர் செக்டார் 99 இல் உள்ள சுப்ரீம் டவர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஏழாவது மாடியில் உள்ள வீட்டில் வசிக்கும் ஒரு நண்பர் நடத்திய விருந்தில் கலந்து கொள்ளச் சென்றுள்ளார்.

அவரது காதலி என்று கருதப்படும் பெண் உட்பட அவரது நண்பர்கள் பலர் கூட்டத்தில் இருந்தனர். தபாஸ் மற்றும் அவரது காதலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்துள்ளதாகத் தெரிகிறது.

இருவரும் சட்டம் படிக்கிறார்கள் ஆனால் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பார்ட்டியின்போது ஒரு கட்டத்தில், தபாஸ் ஏழாவது மாடி பால்கனியில் இருந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அவரது தவறி விழுந்தாரா, தற்கொலை செய்துகொண்டாரா அல்லது தள்ளி விடப்பட்டாரா என்ற கோணங்களில் போலீஸ் விசாரித்து வருகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்த உடன் அங்கு சென்ற போலீஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தபாஸின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் ஐந்து நபர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 
 

Leave a Reply