• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தவணை பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம்

இலங்கை

வடமத்திய மாகாணத்தில் 11 ஆம் வகுப்பு தவணை பரீட்சை வினாத்தாள்கள் மூன்று, தேர்வுக்கு முன்னதாகவே கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அது மாகாண கல்விச் செயலாளரின் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட குழு 5 உறுப்பினர்களைக் கொண்டதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பாக சிறப்பு தணிக்கையை தொடங்க மாகாண கல்வி செயலாளர் சிறிமேவன் தர்மசேன அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வடமத்திய மாகாண தரம் 11 பரீட்சையை எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தற்போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply