கனடாவில் தற்காலிகமாக வாசிப்போருக்கு மறுக்கப்படும் சந்தர்ப்பம்
கனடா
கனடாவில் தற்காலிகமாக வசிப்பவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சந்தர்ப்பமொன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளாக்போலிங் (flagpoling) என்ற இந்த சந்தர்ப்பமானது கனடாவில் தற்காலிகமாக வதிபவர்கள் அமெரிக்கா கனடிய எல்லை பகுதிகளை கடப்பதற்கு உதவும் முறையாகும்.
இதுவரை காலமும் அமெரிக்க மற்றும் கனடிய எல்லை பகுதியின் இந்த பிளாக்போலிங் அனுமதி வழங்கப்பட்டது.
எனினும் இனிவரும் காலங்களில் கனடிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு விண்ணப்பம் செய்வதன் மூலமே இந்த வசதியை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய நடைமுறையானது தற்காலிகமாக வதிவோருக்கு தொழில் அனுமதி மற்றும் கல்வி அனுமதிக்கான சந்தர்ப்பங்கள் வரையறுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
பிளாக்போலிங் முறையானது விசா பெற்று கொள்வதற்கு ஓர் இலகுவான வழியாகும் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் எதிர்வரும் காலங்களில் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டு குடியேறிகள் மேற்கொள்ளும் துஷ்பிரயோகங்களை தடுக்கும் நோக்கில் இந்த முறைமையை இடைநிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிளாக்போலிங் சந்தர்ப்பம் மறுக்கப்படுவதனால் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு தொழில் மற்றும் கல்வி வீசா பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.