• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்க கனடியே எல்லை பகுதியில் பஸ் விபத்து

அமெரிக்க கனடிய எல்லை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிலர் காயமடைந்துள்ளனர்.

கனடாவின் கியூபெக் கிழக்கு பகுதியில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. மொன்றியலுக்கு தென்கிழக்காக சுமார் 672 கிலோ மீட்டர் தொலைவில் செயின்ட் ஆர்மெண்ட் பகுதியில் இரவு 8.30 மணி அளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

சாரதி பஸ்ஸின் கட்டுப்பாட்டை இழந்ததினால் இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 15 பயணிகள் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கும் பட்டுள்ளனர். மேலும் 40 பயணிகள் சிறுகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு விபத்துக்குள்ளானவர்களில் இரண்டு பேர் மட்டும் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இவர்களுக்கும் உயிர் ஆபத்து கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. 
 

Leave a Reply