• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகர் பிரபுவுக்கு திடீரென நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை.. வெளியான பரபரப்பு தகவல்

சினிமா

வெள்ளித்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் பிரபு. சிவாஜி கணேசனின் மகனான இவர் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக பயணித்து வருகிறார்.

தன் தந்தை சிவாஜியை தொடர்ந்து சினிமாவில் பிரபு நடிக்க வந்தது போன்று தற்போது அவருடைய மகன் விக்ரம் பிரபுவும் தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

பிரபு நடித்து கடைசியாக PT சார் படம் வெளியானது. தற்போது அஜித்தின் குட் பேட் அக்லீ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அறுவை சிகிச்சை

இந்நிலையில், எப்போதும் சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் இருக்கும் பிரபுக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில், மூளை அனீரிசிம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், பிரபு இப்போது ஓய்வில் இருந்து வருவதாகவும், அவரை குடும்பத்தினர் கவனித்து கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.  
 

Leave a Reply