• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கோட் திரைப்படத்தினால் மன உளைச்சலுக்கு உள்ளானேன் - மீனாட்சி சவுத்ரி

சினிமா

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தி கோட்'. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து இருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை தமிழகத்தில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிட்டார்.

இப்படம் வெளியாகி மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்தது. 2024 ஆண்டில் அதிகம் வசூலித்த திரைப்படமாக அமைந்தது. தற்பொழுது விஜய் தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் கதாநாயகியான மீனாட்சி சவுத்ரி சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கோட் திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது " கோட் திரைப்படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரத்திற்கு மிகவும் எதிர்மறை விமர்சனங்கள் வந்தது. இதனால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானேன். அதைத்தொடர்ந்து வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் என்னை பாராட்டினர். லக்கி பாஸ்கர் திரைப்படமே என்னை டிப்ரஷனில் இருந்து மீள உதவியாக இருந்தது " என குறிப்பிட்டுள்ளார். 
 

Leave a Reply