• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முன்னாள் அமைச்சரின் சகோதரருக்கு விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர நாணயக்காரவை எதிர்வரும் ஜனவரி 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதிவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.

பின்லாந்து நாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி 30 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டுக்கு அமைவாக முன்னாள் அமைச்சரின் சகோதரர் திசர இரோஷன நாணயக்கார கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து கம்பஹா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை ஜனவரி 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவுக்கு அமைவாக அவர் இன்று வரை விளக்கறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
 

Leave a Reply