நாக சைதன்யா - சாய் பல்லவி நடித்த தண்டேல் படத்தின் நமோ நம் ஷிவாய பாடல் வெளியானது
சினிமா
அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சாய் பல்லவி அடுத்ததாக தண்டேல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சந்து மொண்டேடி இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகனாக நாக சைதன்யா நடித்துள்ளார். தண்டேல் படத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா மீனவர்களாக நடித்துள்ளனர். குறிப்பிடத்தக்கது.
படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டுள்ளார். கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி உலகம்மெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் பாடலான நமோ நம ஷிவாயா லிரிக் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை விவேகா வரிகளில் மஹாலிங்கம் மற்றும் ஹரிபிரியா இணைந்து பாடியுள்ளனர்.






















