• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹிந்தியில் வெளியான பேபி ஜான் படத்தால் அட்லீக்கு இத்தனை கோடி நஷ்டமா?

சினிமா

தமிழ் சினிமாவில் அட்லீ, விஜய்யை வைத்து முதன்முறையாக இயக்கிய படம் தெறி. இந்த படத்தால் அட்லீயின் திரைப்பயணம் பெரிய அளவில் வளர்ந்தது.

அதன்பின் மெர்சல், பிகில் என படங்கள் இயக்கியவர் ஹிந்திக்கு சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார், அப்படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது. 

முதல் ஹிந்தி படமே வெற்றியடைய அட்லீ அங்கு பேபி ஜான் என்ற படத்தை தயாரித்திருந்தார். வருண் தவான்-கீர்த்தி சுரேஷ் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியானது.

இந்த படத்தை அட்லீ ரூ. 160 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளார், ஆனால் இதுவரை படம் வெறும் ரூ. 23 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது என கூறப்படுகிறது.

படத்தின் வசூலும் பெரிய அளவில் வரவில்லை, எனவே இப்படத்தால் அட்லீக்கு ரூ. 100 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்கின்றனர். 

Leave a Reply