வெங்கடேஷ் நடித்த சங்கராந்திகி வஸ்துனம் படத்தின் பிளாக்பஸ்டர் பொங்கல்பாடல் வெளியீடு
சினிமா
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் வெங்கடேஷ் தகுபதி . இவர் நடிப்பில் இந்தாண்டு சைந்தவ் என்ற படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இவர் அடுத்ததாக அனில் ரவிபுடி இயக்கத்தில் சங்கராந்திகி வஸ்துனம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்துள்ளார். படத்தின் இசையமைப்பை பீம்ஸ் செசிரோலியோ மேற்கொண்டுள்ளார். படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மூன்றாம் பாடலான பிளாக்பஸ்டர் பொங்கல் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் மிகவும் வைபாகவுள்ளது. வெங்கடேஷ், ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சவுத்ரி இணைந்து நடனமாடியுள்ளது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. இப்பாடலை ராமஜொகய்யா வரிகளில் பீம்ஸ், வெங்கடேஷ் மற்றும் ரோஹினி சோரத் இணைந்து பாடியுள்ளனர்.
இப்படத்தில் வெங்கடேஷின் முன்னாள் காதலி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் மீனாட்சி சவுத்ரி மற்றும் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் ஐஷ்வர்யா ராஜேஷ். இத்திரைப்படம் ஒரு முக்கோண கிரைம் கதைக்களத்துடன் அமைந்துள்ளது. திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.