ரஜினிகாந்தின் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியாகும் ஜெய்லர் 2 ப்ரோமோ
இலங்கை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது. இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க, கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.
இந்த படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என ஏற்கனவே நெல்சன் தெரிவித்திருந்தார். இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
டிசம்பர் 12-ந்தேதி ரஜினிகாந்த் பிறந்த நாள் ஆகும். அன்றைய தினம் "ஜெய்லர் 2" படத்திற்கான ப்ரோமோவை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான "ப்ரோமோ சூட்" டிசம்பர் 5-ந்தேதி தொடங்கும் என தகவல் கசிந்துள்ளது. EVP-ல் அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடத்து வருகிறார். இந்த படம் தொடர்பான புது அப்டேட்டும் அன்றைய தினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் பிறந்தநாள் அன்று இரண்டு படங்களின் சூப்பர் அப்டேட் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமைய இருக்கிறது.
ஜெய்லர் படத்தில் ரஜியுடன் வினாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகிபாபு, மோகன்லால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார்.