கனடாவில் யாழ்ப்பாண நபரை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்
கனடா
கனடாவில் உள்ள பகுதியொன்றில் இலங்கைத் தமிழரான தந்தையை மகன் கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த 66 வயதுடைய நபரொருவரே என்பவரே கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
தமிழினப் பற்றாளரும் கனேடியத் தமிழ் வானொலி, பத்திரிகைத் துறையின் முன்னோடி பிரபல சமூக சேவையாளருமான குலத்துங்கம் மதிசூடி கடந்த 40 ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்து வருகின்றார்.
ஆண்டுக்கு ஒருமுறை காரைதீவு வந்து செல்கின்றவர். அம்பாறை மாவட்டத்தில் பல சமூக செயற்பாடுகளைச் செய்தவர்.
அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அவரது மகன் இளங்கோ காதல் முறிவு காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தவர் என்று சொல்லப்படுகின்றது.
சம்பவ தினத்தன்று இரவு தாயை ஒரு அறையில் பூட்டிவிட்டு தந்தையைக் கத்தியால் குத்தி கொலை செய்திருப்பதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
உடனடியாகக் கனடா பொலிஸார் அவரைக் கைது செய்து காவலியில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கனேடிய ஊடகங்கள் இந்தச் சம்பவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தகவலை வெளியிட்டு வருகின்றன.