TamilsGuide

முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பிணையில் விடுவிப்பு

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இன்று (20) காலை கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பதுளை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஹரீன் பெர்னாண்டோ  பதுளை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப் படுத்தப்பட்டபோதே தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல  நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 11ஆம் திகதி பதுளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பொலிஸாருடன் இடம்பெற்ற முறுகல்நிலை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஹரின் பெர்னாண்டோ இன்று காலை பதுளை பொலிஸில் முன்னிலையாகியிருந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment